முன்னாள் மத்திய வங்கி ஆளுநா்அர்ஜுன் மகேந்திரன் செய்த பிணை முறி மோசடியின் மூலம் கோடிக்கணக்கில பணம் பெற்றுக் கொண்டு நன்மையடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 109 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளிவரும் சந்தா்ப்பத்தில் அவர்கள் அரசியலிலிருந்து முற்றாக விடை பெற வேண்டிய நிலை ஏற்படுமென கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
கூடிய சீக்கிரம் அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்படுவார் என்றும் அதன் பின்னா் அவரிடமிருந்து ரகசியங்கள் வெளிவருமெனவும், கூறிய அவா், இதன் காரணமாவேதான் மகேந்திரனை கைது செய்ய நல்லாட்சி அரசாங்கம் முனைப்பு காட்டவில்லையென்றும் அவர் கூறினார்.
ஊழல் மோசடிகளுக்கு கடுமையான எதிர்ப்பு காட்டி 2015ல் அதிகாரத்திற்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் சில மாதங்களில் பிணைமுறி தொடர்பில் பாரிய முறைகேடுகளில் ஈடுபட்டது. அதன் விசாரணை சம்பந்தமாக வெளிப்படைத் தன்மை இல்லாத நிலையில் ரவி கருணாநாயக போன்றவர்கள் மீதான குற்றச்சாட்டுளை மறைக்க முயன்றது.
அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து என்னதான் வெளிப்படுத்தினாலும் அதனால் மத்திய வங்கிக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய முடியாமா என்ற கேள்வி உள்ளது என்றும் அவா் கூறினார்.

0 Comments