Ticker

6/recent/ticker-posts

‘இசை சுனாமி’: அனிருத்துக்கு புதிய பட்டம்


‘பேட்ட’ இசை வெளியீட்டு விழாவில், அனிருத்துக்கு ‘இசை சுனாமி’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. மொத்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, சசிகுமார், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று (டிசம்பர் 9) சென்னையில் நடைபெற்றது. அதில் வரவேற்புரை வழங்கிய சன் டிவியின் துணைத் தலைவர் செம்பியன் சிவகுமார், அனிருத்தை ‘இசை சுனாமி’ என்ற பட்டப்பெயரிட்டு அழைத்தார். இதன்மூலம் அனிருத்துக்கு புதிய பட்டம் கிடைத்துள்ளது.tamil.thehindu.com

Post a Comment

0 Comments