Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் ஆட்சியிலேயே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் – திஸ்ஸ விதாரண

மஹிந்த தலைமையிலான ஆட்சியிலேயே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஐக்கிய தேசிய கட்சியினரே கொண்டு வந்தார்கள். நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டால் அது ஜனநாயகத்தை மீறும் செயல் என ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று.
நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அதிக பெரும்பான்மை உள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு உள்ளதால் தனக்கே பெரும்பான்மை என்கிறார்.
ஆனால் கூட்டமைப்பினரோ ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கவில்லை. இந்நிலையில் எஞ்சியிருக்கும் 6 மாத கால ஆட்சியில் தீர்வு கிடைக்குமென தமிழ்தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என சம்பந்தன் பல தடவைகள் கூறி வந்திருக்கிறார்.
எனவே மஹிந்த தலைமையிலான ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது உறுதி. அதற்கு எமது கட்சி பூரண ஆதரவை வழங்கும்“ என தெரிவித்துள்ளார்.Athavan News

Post a Comment

0 Comments