Ticker

6/recent/ticker-posts

நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி சிறிசேன பார்வையிட்டார்!

பொலன்னறுவை தீப்பெட்டி பாலத்திற்கு சமாந்தரமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கால்வாய்ப் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி  சிறிசேன நேற்று முன் தினம் பார்வையிட்டார்.

பொலன்னறுவை விஜயபாபுர பிரதேசத்தில் உள்ள இப்பாலம் பராக்கிரம சமுத்திரத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் ஒரேயொரு கால்வாய்க்கு உட்பட்டதாகும்.

எழுச்சிபெறும் பொலன்னறுவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நீண்டகால நடவடிக்கையாக இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், இதற்கு 2500 லட்சம் ரூபா செலவிடப்படுகிறது. இதன் மூலம் 18000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் வழங்கப்படவுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அங்கு சென்ற ஜனாதிபதி பாலத்தின் நிர்மாணப் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், நிர்மாணப் பணிகளை விரைவு படுத்தி அதன் நன்மைகளை விவசாய சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

Post a Comment

0 Comments