Ticker

6/recent/ticker-posts

சிறிசேனவிற்கு சிறந்த பாடத்தை புகட்டத் தயாராகும் ரணில்


நாடு முழுவதிலிருந்தும் மக்களை கொழும்பில் ஒன்று திரட்டி ஜனாதிபதி  சிறிசேனவிற்கு தகுந்த பாடத்தை புகட்டுவோம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில்  இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “நாடாளுமன்றம், நீதிமன்றம் உட்பட மக்கள் கருத்துக்கும் நிறைவேற்று அதிகாரி செவிசாய்க்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் நாடுமுழுவதும் உள்ள மக்களை கொழும்பில் ஒன்று சேர்த்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.

ஜனநாயகத்தைப் காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கும் மக்கள் போராட்டம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் மட்டும் சுருங்கிவிடுவதில்லை.

கட்சி பேதம் பாராமல் மக்கள் போட்டமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்படும். நீதிமன்றத் தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னர் போராட்டம் மேற்கொள்வதால் எந்தவித பயனும் கிடைக்க போவதில்லை.

ஆகையினால் அடுத்த வாரம் நீதிக்கான மக்கள் போராட்டம் மேற்கொள்ளப்படும்” என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments