முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலம் ஒன்றின் சிதைந்த உடல் நேற்றுக் கரையொதுங்கியுள்ளது. சுமார் 30 அடி நீளம் கொண்ட திமிங்கலத்தின் உடலில் அடிபட்ட காயம் காணப்படுவதாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பல்களுடன் மோதுண்டு காயமடைந்தமையால் அது இறந்திருக்கலாம் என்று அறியவருகிறது. பொலிஸார் திமிங்கலத்தைப் பார்வையிட்டு அதனைப் புதைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
0 Comments