Ticker

6/recent/ticker-posts

உயர் நீதிமன்றத் தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக் கொள்வதாக சிறிசேன அறிவிப்பு


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் தான் அதனை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி  சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதுடன் அதற்குத் தேவையான அரசியல் நடவடிக்கைகளை தான் எடுக்கப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முன்னெடுத்து வரும் வழக்கு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments