யாழ்ப்பாணத்திலுள்ள “நாகதீப” நயினை தீவு விகாரைக்கு வழிகாட்டும் பெயர்ப்பலகையிலுள்ள விகாரையின் படம் நேற்றிரவு வர்ணம் பூசி மறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாகதீப செல்லும் பௌத்த பயணிகளுக்கு வசதியாக இந்த பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது. வேலணை சந்தியில் வைக்கப்பட்டிருந்த இந்த பெயர்பலகையில் உள்ள விகாரையின் படத்தின் மீது இனந்தொியாதோர் வர்ணம் பூசி சிதைத்துள்ளனா்.
யுத்தம் முடிவுற்று 10 வருடங்களை அண்மித்துள்ள நிலையில் சுமுகமாக இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலை தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையைத் தொடர்ந்து திட்டமிட்டு இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நம்பப்படுகிறது.
சிறிசேன, மஹிந்த கூட்டணியின் ஜனநாயக விரோத செயற்பாட்டை நிராகரித்த சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்கள் மஹிந்த சார்பு அரசியல் இனவாத சக்திகளால் இலக்கு வைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த இனவாத சக்திகளின் சதி வேலைகளின் ஒரு வடிவமாக இத்தகைய இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்கும் செயற்பாடுகள் இருக்கலாம் என்பதே அனேகரின் கருத்தாக இருக்கிறது.
0 Comments