Ticker

6/recent/ticker-posts

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்ஷ?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தடைகளும் நீங்கியிருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் முன்னாள்  பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வியத்மக அமைப்பின் வருடாந்த கூட்டம்  நேற்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பிய அவர், வியத்மக அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றினார்.

அதில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ஷ, இந்த ஆண்டு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும் என்றும், ஜனாதியதி தேர்தல் நடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மக்கள் விரும்பினால், ஜனாதியதி தேர்தலில் போட்டியிடும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆசீர்வாதங்களைப் பெற்றால் மட்டுமே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக பல சந்தர்ப்பங்களில் கோத்தாபய குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments