( ஐ. ஏ. காதிர் கான் )
இளம் சமுதாயத்தினரை போதைப்பொருள் அடிமையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், மினுவாங்கொடை - கல்லொழுவை கிராமத்தில் வசிக்கும் சிங்கள, முஸ்லிம், கிறிஸ்த்தவ மக்கள் ஒன்றிணைந்து, கிராமிய மட்டத்திலான அமைப்புக்கள் ஊடாக, போதைப்பொருள் ஒழித்தல் தொடர்பிலான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை, அண்மையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில், மினுவாங்கொடை பிரதேச அனைத்து சமய மதகுருமார்கள், கல்லொழுவை அல் - நிழாமிய்யா அரபிக் கல்லாரி மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் அஹதிய்யாப் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மினுவாங்கொடைக் கிளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உறுப்பினர்கள், கல்லொழுவை முஸ்லிம் நலன்விரும்பி சகோதரர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments