( ஐ. ஏ. காதிர் கான் )
கம்பஹா மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப்
பாதுகாப்பது சம்பந்தமான விசேட கூட்டம், கம்பஹா மாவட்ட செயலகத்தில் மாவட்ட
செயலாளர் சுனில் ஜயலத் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விசேட கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து மொழிப் பாடசாலைகள்,
மதஸ்தலங்கள், அரசாங்க திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மாவட்ட
மக்களுக்கு குடிநீர் வழங்கும் தாங்கிகள், குடிநீரைப் பெற்றுக்கொள்ளும்
மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம்
செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது.
இவ்விசேட கூட்டத்தில் கலந்துகொண்ட கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் மாவட்டப் பாதுகாப்பாளர்கள்
மத்தியில் பாதுகாப்பு வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
0 Comments