Ticker

6/recent/ticker-posts

உள்ளூராட்சி மன்றங்களின் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் வஜிர, கனேடியத் தூதுவருக்கு இடையில் உடன்பாடு

( ஐ. ஏ. காதிர் கான் )

   நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும்  இலங்கைக்கான கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மெக்கீனன் (David Mckinnon) ஆகியோருக்கு இடையில் அண்மையில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

   நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும்  தேவையான வசதி வாய்ப்புக்களை மேலும் அதிகரித்துத் தரும்படி, அமைச்சர் வஜிர அபேவர்தன இக்கலந்துரையாடலின்போது கனேடிய நாட்டுத் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். 
   உள்ளூராட்சி மன்றங்களைப் பலமிக்கதாகவும், உயர் மட்டத்தில் நடத்துவதற்கும் மற்றும் அவற்றுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் கனேடிய நாட்டுத் தூதுவர் இக்கலந்துரையாடலின்போது அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். 

   இதேவேளை, நாட்டிலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான நிதியுதவி வசதிகளைச் செய்து கொடுக்கவும் இங்கு கருத்து பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments