Ticker

6/recent/ticker-posts

ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்கு புதிய போக்குவரத்து நடைமுறை

( ஐ. ஏ. காதிர் கான் )

   ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கிப்  பயணிக்கும் பஸ்களுக்காக  புதிய போக்குவரத்துத்  திட்டமொன்றைச்  செயற்படுத்தவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

   இதன்பிரகாரம்,  பாராளுமன்ற வீதி ஊடாக கொழும்பு நோக்கிப்  பயணிக்கும் பஸ்கள், வெலிகடை சந்தியால் கொட்டா வீதிக்குத் திருப்பி,  அதனூடாக ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளது. 

   இது வரை காலமும்,  கொழும்பு நோக்கிப்  பயணித்த பஸ்கள்,  ஆயுர்வேத சந்தியால் கொட்டா வீதிக்குள் பிரவேசித்த நிலையில், திங்கட்கிழமை முதல் புதிய போக்குவரத்துத்  திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
 
   ஆயுர்வேதச்  சந்திக்கு அருகில் ஏற்படுகின்ற பாரிய வாகன நெரிசலுக்குத்  தீர்வாகவே,  இந்தப் புதிய போக்குவரத்துத்  திட்டத்தைச்  செயற்படுத்துவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments