Ticker

6/recent/ticker-posts

மதுபாவனையில் ஈடுபடும் சாரதிகள் நடத்துனர்களைப் பரிசோதிக்க நடவடிக்கை

( ஐ. ஏ. காதிர் கான் )

   மேல் மாகாணத்தின் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மதுபானத்தைப்  பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் கண்டறிய  விரிவான நடவடிக்கைகள்  தற்போது முன்னெடுக்கப்படுவதாக, மேல் மாகாணப்  பயணிகள் போக்குவரத்து  அதிகார சபையின் தலைவர் துஷித்த குலரத்ண தெரிவித்துள்ளார்.   பயணிகளுக்கு பயணச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றதா என்பது தொடர்பில்  முற்றுகை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

   பயணிகளுக்கு பயணச் சீட்டுக்கள்  வழங்கப்படுவது கட்டாயமாகும்.  இருப்பினும்,  தற்பொழுது இது முறையாக இடம்பெறுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

   மேல் மாகாணத்தில் அனைத்துத்  தனியார் பஸ்களுக்காகவும்  வலியுறுத்தப்பட்டுள்ள வர்ணங்களுக்கு அப்பால்,  வேறேதும் வர்ணங்கள் அடிக்கப்பட்டிருந்தால், அதனையும் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

    இது தொடர்பிலான நடவடிக்கைகள்,  ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்தக் காலப்பகுதி  முதல் வழங்கப்படும் மூன்று மாத காலப்பகுதிக்குள் உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Post a Comment

0 Comments