Ticker

6/recent/ticker-posts

குண்டுத் தாக்குதல் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களில் 322 நபா்களே தடுப்புக் காவலில் இருக்கின்றனா்.

முஸ்லிம் பெயா் தாங்கி பயங்கரவாத கூலிப்படைகள் மேற்கொண்ட ஏப்ரல் 21 ஈஸ்டா் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து  இரண்டாயிரத்திற்குமதிகமான முஸ்லிம்கள் சந்தேகத்தின் போில்  பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டனா்.

இந்த காட்டுமிராண்டித்தனமான  கொடிய தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவு பெறும் நிலையில் சந்தேகத்தின் போில் கைது செய்யப்பட்டவா்களில் பலர் விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.

அண்மையில் பிதமா் ரணில் விக்கரசிங்கவுடனான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினா்களின் சந்திப்பின் போது தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பவா்கள் தொடா்பாக பாதுகாப்பு தரப்பினா் தகவல்களை வழங்கியுள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களில் தற்போது 322 போ் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. இதில் 155 நபா்கள் சிறைச்சாலைகளிலும், மீதமுள்ள  167 நபா்களில் 140 நபா்கள் குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுகளில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன்,  27 நபா்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனா்.

குற்றமற்றவா்கள் என்று நிரூபிக்கப்படுபவா்களை எதிர்வரும் தினங்களில் விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய வருகிறது.

குற்றப்பலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிாிவுகளில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கும் 167 நபா்களும்  நேரடியாக ஸஹ்ரான் என்ற கூலிப்படை பயங்கரவாதியோடு  தொடா்பு பட்டவா்கள் என்றும் அறிய வருகிறது. 

முகப்புத்தகத்தில் இரத்த வாடை வீசும் வெறித்தனமான பதிவுகளை இட்டு,  பயங்கரவாத சிந்தனையைப் பரப்பி, “பத்வா பெக்டெரி”களாக  இயங்கிய முக்கிய புள்ளிகள் பலரும் இந்த பயங்கரவாத தாக்குதல்களில் நேரடியாக சம்பந்தப் பட்டுள்ளதாக அறிய வருவதுடன், இவா்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்தும்  இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments