Ticker

6/recent/ticker-posts

மார்ச் 1-15 திகதிகளில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுக்கும் அறிவித்தல்!

மார்ச் 1 முதல் 15 வரை ஐரோப்பா, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இலங்கை வந்தவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் 1ம் திகதி முதல் 15ம் திகதி வரையுள்ள காலப்பகுதியில்   ஐரோப்பா, ஈரான் அல்லது தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தால், அவர்கள் தனக்கும், சமூகத்துக்கும் நன்மை செய்வதற்காக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில்  தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறும் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments