Ticker

6/recent/ticker-posts

கிழங்கில் மறைத்து கொண்டு வரப்பட்ட 100 கிலோ ஹெரொய்ன் போதைப்பொருள்!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த உருளைக்கிழங்கு கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ ஹெரொய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை  (எஸ்.டி.எஃப்) இணைந்து நடாத்திய தேடுதலில் நீர்கொழும்பு  கொச்சிகடை பகுதியில் செயற்கை கிழங்கில் மறைத்து  கொண்டு வரப்பட்டிருந்த இந்த ஹெரொய்ன் போதைப்பொருள் நேற்று (12) சிக்கியது.


பாகிஸ்தானில் இருந்து கிழங்கு இறக்குமதி செய்யும் போர்வையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கொள்கலனில் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஹெரொய்ன் மறைத்து கொண்டு வரப்பட்ட இந்த கொள்கலன் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால்  நேற்று துறைமுகத்திலிருந்து சகல பரிசோதனைகளும் நிறைவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருப்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவத்தில் முக்கிய மோசடி செய்த பாகிஸ்தான் நாட்டவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை பொலீசார் கைது செய்துள்ளனர்.



Post a Comment

0 Comments