Ticker

6/recent/ticker-posts

3000 ரூபாய்க்கு குறைவாக செலவாகும் கொரோனா PCR பரிசோதனைக்கு 17,000 அறவிடும் ஆசிரி மருத்துவமனை!

3000 ரூபாய்க்கு குறைவாக  செலவாகும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும்  PCR பரிசோதனைக்கு ஆசிரி தனியார் மருத்துவமனை 17,000 அறவிட்டு இலாபமீட்டுகிறது என்று அரசாங்க மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது,

இந்த PCR பரிசோதனை வசதிகள்  அரசாங்க மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திலும்,  நாரஹேன்பிட்டியில்  உள்ள முன்னணி தனியார் மருத்துவமனையான  ஆசிரி சர்ஜிக்கல் மருத்துவ மனையில் மட்டுமே  இருக்கும் நிலையில், 3000 ரூபாய்க்கும் குறைவாக செலவாகும் கொரோனா நோய்த்தொற்றுகளை அடையாளம் காணும்  பி.சி.ஆர் சோதனைக்கு
குறித்த ஆசிரி மருத்துவமனை அதிகமாக பணம் அறவிட்டு இந்த இக்கட்டான நிலையில் கூட இலாபமீட்ட முயற்சி செய்வதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டுகிறது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இதற்கிடையில், கொரோனா மருத்துவ PCR பரிசோதனை  வசதிகள் தம்மிடம் இருப்பதாகவும் அதற்கான கட்டணம் 17, 000 ரூபாய்கள் என்றும் ஆசிரி மருத்துவமனை தொலைபேசி பாவனையாளர்களுக்கு  குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பி வருகிறது.

Post a Comment

0 Comments