கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து இனங்களும், மதங்களும், கட்சிகளும், ஒன்றிணைந்து, நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவது இந்த நேரத்தில் முக்கியமானதாகும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
"அரசாங்கத்திற்கு மட்டும் திட்டிக் கொண்டிருக்காமல், அரசியல்வாதிகளை குறை கூறிக் கொண்டிருக்காமல் , மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்காமல் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தள்ளார்.
இது தொடர்பாக மங்கள சமரவீர நேற்று (12) சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் மேலும் கூறியதாவது,
"கொரோனா வைரஸ், அல்லது கோவிட் -19, கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் ஒரு தொற்றுநோயாக அடையாளம் காணப்பட்டது, ஆனால் அது இப்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
இலங்கையில் இந்த கொடிய வைரஸ் பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த வைரஸை உடனடியாக எதிர்த்துப் போராட நாம் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
ஏனெனில் இந்த வகை வைரஸுக்கு நிறம், கட்சி, மதம், சாதி எதுவும் இல்லை. எல்லைகள் இல்லை. இது உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் சிங்கள பௌத்தர்களை மட்டும் தேடிச்சென்று தாக்கும் வைரஸ் அல்ல, தமிழ் மக்களை மட்டும் தேடிச்சென்று தாக்கும் வைரஸ் அல்ல முஸ்லிம்களை மட்டும் தேடிச்சென்று தாக்கும் வைரஸ் அல்ல .
அதேபோல இது மொட்டுக் கட்சியினரை மட்டும் தாக்கும் வைரஸோ, ஐதேகயினரை மட்டும் தாக்கும் வைரஸோ, அல்லது ஜே.வி.பியினரை மட்டும் தாக்கும் வைரஸோ அல்ல.
இந்த கொரோனா இலங்கையர்களாகிய நாம் அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாகும் என்றும் அவர் கூறியள்ளார்.

0 Comments