Ticker

6/recent/ticker-posts

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீறி செயற்படுமாறு ஈரானின் வெளியுறவு அமைச்சர் லண்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு

கொரோனா வைரஸ் பரவலின் அனர்த்தத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீறி செயற்படுமாறு ஈரானின் வெளியுறவு அமைச்சர்  லண்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்சமான  பொருளாதாரத் தடைகள் கொரோனா என்ற உலகளாவிய ரீதியிலான தொற்றுநோய்க்கான  எதிர் நடவடிக்கைகளுக்கு  ஒரு தடையாக இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர்  முகமது ஜவாத் சரீஃப் தனது பிரிட்டிஷ் பிரதிநிதி டொமினிக் ராப் உடனான   தொலைபேசி உரையாடலில் போது  தெரிவித்துள்ளார்.

இத்தகைய  இக்கட்டான சூழ்நிலைகளில் ஈரானிய தேசத்திற்கு எதிரான அமெரிக்காவின் கொடூரமான பொருளாதாரத் தடைகளை மீறுவதற்கு அவர் இங்கிலாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்காக ஈரானுக்கு உதவி அனுப்பியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மூன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ,  இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் அவர்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments