Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு நாசகார வேலைத்திட்டத்தின் நாயகன் நவ்பர் மௌலவி!


கடந்த ஆண்டு
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது முக்கிய சூத்திரதாரியாக நவ்பர் மௌலவி என்பவரே செயற்பட்டு வந்துள்ளதாக இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜயவர்தன இந்த தகவலை மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய நிலந்த ஜயவர்தன இதனை கூறியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசிம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாரில் நாட்டில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்த நவ்பர் மௌலவி தனது முகப்புத்த பதிவுகளில் மிகவும் மும்முரமாக, மோசமாக தீவிரவாத கருத்துகக்களை பரப்பி வந்தவராவார். முகப்புத்தக “முப்தி” யாக தன்னை அடையாளப்படுத்தி வந்த இந்த நவ்பர் மௌலவி பலருக்கும் அச்சுறுத்தல் விட்டு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முகப்புத்தகத்தில் பரப்பப்பட்ட இவரின் மோசமான கருத்துக்களை, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பலர் மௌனமாக அங்கீகரித்தும் வந்தனர். இத்தகைய நாசகார வெளிநாட்டு கூலிப்பட்டாளங்களினால் இந்நாட்டு முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு இடம் பெற்ற தினம் கொழும்பிலிருந்து தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை இவர் தம்புள்ள பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுபபுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


Post a Comment

0 Comments