Ticker

6/recent/ticker-posts

வெற்றி பெற முடியாத அணியினருடன் இணைந்திருப்பதனால் எந்த விதப் பயனும் இல்லை - ஏ.எல்.எம். பாரிஸ்


.காதிர் கான் )

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும்இவ்வாறு வெளிப்படையாகத் தெரிந்திருந்த போதிலும்தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் வெற்றி பெற முடியாத அணியினருடன் இணைந்திருப்பதனால் எந்த விதப் பயனும் இல்லை எனகண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் .எல்.எம்பாரிஸ் தெரிவித்தார்.

ஹரிஸ்பத்துவ தொகுதியில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது,

கண்டி நகரம் நவீன நகராக அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறதுஇவை மாத்திரம் அல்லாமல்இம்மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளனஜனாதிபதி இம்மாவட்டத்தைத் திட்டமிட்ட அடிப்படையில் துரிதமாக அபிவிருத்தி செய்துள்ளார்அவரது வேலைத்திட்டங்களை மேலும் முன்னெடுத்துச்செல்வதற்காகஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தமது ஆதரவுகளை பொதுஜன பெரமுன கட்சிக்கு வழங்க வேண்டும்.

இலங்கையில் வட கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்கிஅவர்களின் உரிமை மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதே எனது இலக்காகும்அந்த இலக்கினை அடைவதற்கு கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டும்இதேவேளைமத்திய மலை நாட்டில் வாழும் எமது உறவுகள் கண்டி வாழ் தமது உறவினர்கள் நண்பர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துபொதுஜன பெரமுனவுக்கும் தனது விருப்பு இலக்கத்துக்கும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றார்.   

Post a Comment

0 Comments