எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிய வருகிறது.
பொதுஜன இளைஞர் பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில், கட்சி யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என இளைஞர் அமைப்பினர் மத்தியில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“சூம்” தொழிநுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 75 நிர்வாக சபை உறுப்பினர்களில் 54 பேர் திரு.டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க கூடாது என மற்றொரு குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 145 ஆகும்.

0 Comments