ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் கோரும் நிகழ்வு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த தோ்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இன்று (15) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடாத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும அறிவித்த நிலையில்,
தமது கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

0 Comments