Ticker

6/recent/ticker-posts

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சாா்ஜன்ட் உயிரிழப்பு!


நேற்று (31) இரவு அநுராதபுரம் கெபித்திகொல்லாவ, ரம்பகெபுவெவ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அப்போது பிக்கு ஒருவர் உட்பட நூறு பேர் கொண்ட குழு ஒன்று கெபிதிகொல்லேவ - பதவிய வீதியை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீது ஆா்ப்பாட்டக்காரர்கள் கற்களால் தாக்க முற்பட்டதாகவும் நிலைமையை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஆாப்பாட்டக்காரர் ஒருவரின்  தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் படுகாயமடைந்து கபிதிகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெபிதிகொல்லாவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments