Ticker

6/recent/ticker-posts

இராஜாங்க அமைச்சா் சனத் நிஷாந்தவின் வாகனத்தில் மோதுண்டவா் உயிரிழப்பு!


கடந்த 15ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு வாகனம் மோதியதில் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 30ஆம் திகதி மாலை உயிரிழந்தார்.

புத்தளம் முள்ளிபுரம் மீனவ கிராமத்தில் வசிக்கும் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மொஹமட் சிஹாம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒக்டோபர் 15ஆம் திகதி மாலை, இராஜாங்க அமைச்சர் பயணித்த கார் புத்தளம் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, ​​இறந்தவர் பயணித்த  மோட்டாா் சைக்கிள்,  அமைச்சரின் காரோடு  மோதியது.

காயமடைந்தவர் முதலில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமானதையடுத்து, குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சுமார் 15 நாட்களாக புத்தளம் மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மொஹமட் சிஹாம் 30ம் திகதி மாலை உயிரிழந்துள்ளார்.

புத்தளம் குருநாகல் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த நபர் தனது  மோட்டார் சைக்கிளில் தண்ணீர் எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளார். விபத்து தொடர்பில் அமைச்சரின் சாரதி புத்தளம் தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரான சாரதி மீண்டும் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments