Ticker

6/recent/ticker-posts

பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்க கோரி நுவரெலியாவில் போராட்டம் !


 (க.கிஷாந்தன்)

 

1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகள் இணைந்து  கடந்த (06) ஞாயிற்றுக்கிழமை காலை நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு  முன்பாக  ஆர்ப்பாட்டமொன்று மேற்கொண்டனர்.

 

எமக்கு வேண்டும் தனி வீடுகள், 37000 ஆயிரம் வீடுகளுக்கு உறுதிபத்திரம் வழங்கு, தோட்ட தொழிலாளர் இந்த நாட்டின் பிரஜைகள் என்றும் அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும், எமது நில உரிமையை உடனடியாக பெற்று தாருங்கள், பழமையான வீட்டு வாழக்கை போதும் போன்ற  வாசகங்கள் எழுதிய எதிர்ப்பு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

மேலும் 1987 ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றில் கையொப்பங்கள் திரட்டுவதற்கு  நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திலும் மற்றும், அஞ்சல் அலுவலகத்திற்கும் முன்பாகவும் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.


Post a Comment

0 Comments