Ticker

6/recent/ticker-posts

உயர்தரப் பரீட்சைப்பெறு - யாழ். மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்

2014 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கணிதப் பிரிவில் தோற்றிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த பாக்கியராஜா டாருகீசன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று தமிழிற்கும் யாழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. இப் பரீட்சை பெறுபேறுகளின் படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments