ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு
தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்
தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள்
ஜனாதிபதிக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
ஜனநாயக கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ராஜித ஹப்புவாராச்சி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இணைந்துகொண்டார்.
தமிழ்
தேசிய கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஐவர்
மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.

0 Comments