Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணம் மஹிந்தவின் கூட்டத்திற்கு வந்தவா்களுக்கு வீசி எறியப்பட்ட உணவுப் பெட்டலங்கள்

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படவி;ல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

சமூர்த்தி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து அழைக்கப்பட்ட மக்கள் நீண்ட நேரமாக வெயிலில் காத்துக்கிடந்தனர். இதனால் பலர் மயங்கிவிழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் விரக்கியடைந்த மக்கள் கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர்.
இந்த நிலையில் லொறிகளில் குடிநீர் மற்றும் உணவுப் பெட்டலங்களைக் கொண்டு வந்த ஆளும் தரப்பினர் மக்கள் மத்தியில் வீசியேறிந்தனர். தூர இடங்களிலிருந்து பேரூந்துகளில் அழைத்துவரப்பட்டவர்கள் வேறு வழியின்றி உணவுப் பொட்டலங்களை முண்டியடித்துப் பெற்றிருந்தனர்.இதனால் பாரிய சன நெருசல் காணப்பட்டது.
இதேவேளை தூர இடங்களிலிருந்து யாழ் நகருக்கு மக்கள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் வீதிகளில் பாரிய போக்குவரத்து நெருசல் நிலவியது.

Post a Comment

0 Comments