Ticker

6/recent/ticker-posts

'Operation double edge' கோத்தாவின் போலிப் புலிகள் - இரகசியங்களை இராணுவம் வெளியிடும்..?

இலங்கையில்  போர் இடம்பெற்றபோது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் போலியான புலிகளின் உளவுப்பிரிவொன்றை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்தப்பட்ட 'Operation double edge' செயல்திட்டத்தில் இருந்தவர்கள் குறித்து பகிரங்கப்படுத்த இராணுவம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதற்காக இந்த அமைப்பை கோத்தாபய வழி நடாத்தியிருப்பதாகவும் பல அரசியல்வாதிகளின் கொலைகளுக்கு இந்த போலி  புலிகளின் அமைப்பு காரணமாக இருந்ததாகவும் அறிய வருகிறது.  'Operation double edge' என்ற இந்த அமைப்பு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டதாகவும், தற்போதும் அந்தப் பிரிவு செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ''தவேந்திரன்'' என்ற நபரும் இந்த நிழல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
'Operation double edge' என்ற செயல்திட்டத்தின்போது தவேந்திரன் என்ற குறித்த நபர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்காக பணியாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன், இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தவேந்திரன் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்காக பணியாற்றிய ஐந்து பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments