Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமது சம்பளத்தை வழங்கும் லெபனான் அரசியல்வாதிகள்!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக லெபனானின் பல நகரங்கள் மூடப்பட்டு  முற்றாக  செயலிழந்த  நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் லெபனானின் பல அரசியல்வாதிகள் தங்கள் சம்பளத்தை நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு நன்கொடைாயக அளிப்பதற்கு முன்வந்துள்ளனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, லெபனானின் அமைச்சரவை கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தது.

லெபனானின் எல்லைகளை மூடுவதற்கும், பொது மற்றும் தனியார் வணிகங்களை மூடுவதற்கும் அரசு  கட்டளை பிறப்பித்தது. குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் ஆணை பிறப்பித்தது.

கடந்த திங்களன்று, சுகாதார அமைச்சகம் லெபனானில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109 ஐ எட்டியுள்ளதாக அறிவித்தது. லெபனானில் இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் ஒரு நோயாளி முழுமையாக குணமடைந்துள்ளார்.

Post a Comment

0 Comments