Ticker

6/recent/ticker-posts

நேற்றிரவு மைத்திரிபாலவின் வீட்டை முற்றுகையிட்ட ஸ்ரீ.ல.சு.க. ஆதரவாளர்கள்!

நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பெஜட் பிளேஸ் வீட்டை ஸ்ரீ.ல.சு.க   ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால்  பதற்றமான ஒரு சூழல் நிலவியதாக அறிய வருகிறது.

அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க. எவ்வாறு போட்டியிட வேண்டும் என்பது குறித்து ஒரு  கலந்துரையாடல் நேற்று இரவு ஆரம்பமானது. மொட்டுக் கட்சியில் போட்டியிடுவதற்கு ஸ்ரீ.ல.சு.க. அங்கத்தவர்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கூட்டம்  எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீ.ல.சு.க.  அங்கத்தவர்கள் எதிர்வரும் தேர்தலில் மொட்டுக் கட்சியில் இணைந்து போட்டியிடாமல்  தனித்து போட்டியிட வேண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்டத்தின் முடிவு அறிவிக்கப்படும் வரை தேர்தல் அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் வீட்டின் முன் கூடி இருந்ததாகக் கூறப்படுகிறது

Post a Comment

0 Comments