சி.ஐ.டி திணைக்களத்தின் பாதுகாப்பில் இருந்த பதிவுப் புத்தகம் ஒன்றில் இருந்த விடயங்கள் “டிபெக்ஸ்“ செய்து அழித்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது தொடர்பாகவே முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிஐடி திணைக்கள அதிகாரிகளின் இந்த செயலை மிகவும் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், சிஐடி திணைக்களம் எப்படி இவ்வாறான திருட்டு வேலைகளை செய்கிறது? என்றும் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணம் வித்யா என்ற மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யாமல் விடுவித்தாக குற்றம் சுமத்தி தன்னை கைது செய்து வழக்கு தொடர்ந்தது சம்பந்தமாக மத்திய மாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று (30) வந்தபோது தலைமை நீதிபதி உபாலி அபேரத்னே இவ்வாறு தெரிவித்தார்.

0 Comments