Ticker

6/recent/ticker-posts

கழிவு தேயிலை ஏற்றுமதி மோசடி வியாபாரி கைது!


ஈராக் நாட்டிற்கு கழிவு தேயிலை  ஏற்றுமதி செய்தது தொடர்பில்  பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், கடந்த இரண்டு வருடங்களில் 252 கொள்கலன் கழிவு தேயிலையினை ஈராக் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை சுங்க திணைக்களத்திற்கு தென்னை தும்பினை ஏற்றுமதி செய்வதாக பொய்யான தகவலை கூறி ஈராக்கிற்கு இவ்வாறு கழிவு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது சுங்கத் திணைக்களம் நடாத்திய விசாரணைகளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சிலோன் டீ என்ற பெயரில் குறித்த கழிவு தேயிலை சந்தேக நபரால் ஈராக்கில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோசடி தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம அவர்களின் உத்தரவின் பேரில் குறித்த   சந்தேக நபர் ஆகஸ்ட் 11 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments